Friday, 9 June 2017

அடையாள ஆவணங்கள் இன்றி 3 லட்சம் இந்தியர்களா? குற்றச்சாட்டை முன்வைக்காமல் பதிவு செய்யுங்கள்!


கோலாலம்பூர்-
3 லட்சம் இந்தியர்கள் அடையாள ஆவணங்கள் இன்றி  நாடவற்றவர்களாக இருக்கின்றனர் என குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் தரப்பினர் நாடளாவியல் நிலையில் மேற்கொள்ளப்படும் மை டஃப்தார் நடவடிக்கையில் அவர்களை பதிவு செய்ய முன்வர வேண்டும் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் வலியுறுத்தினார்.

அடையாள ஆவணங்கள் இன்றி தவிக்கும் இந்தியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் ஆக்ககரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதற்கேற்ப மை டஃப்தார் பதிவு நடவடிக்கை கடந்த 5ஆம் தேதி தொடங்கப்பட்டு இதுவரை 6 இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது.

ந்த பதிவு நடவடிக்கையில் இதுவரை 493 பேர் நேரடியாக வந்து பதிவு செய்துள்ளனர் என இன்று கோலாலம்பூர் உள்துறை அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற மை டஃப்தார் நடவடிக்கையின்போது செய்தியாளர்களிடம் பேசுகையில் சுகாதார அமைச்சருமான டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

அடையாள ஆவணங்கள் இன்றி இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஆனாலும் சில தரப்பினர் 3 லட்சம் இந்தியர்கள் அடையாள ஆவணங்கள் இன்றி தவிக்கின்றனர் என அவ்வப்போது குரல் கொடுத்து வருகின்றனர்.

3 லட்சம் இந்தியர்கள் அடையாள ஆவணங்கள் இன்றி தவிக்கின்றனர் என்பது உண்மையென்றால் மை டஃப்தார் நடவடிக்கையில் அவர்களை பதிவு செய்து அவர்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண முற்பட வேண்டுமே தவிர  வெற்று அறிக்கைகள் விடக்கூடாது.

தை விடுத்து பதிவு நடவடிக்கையெல்லாம் தவிர்த்து விட்டு மீண்டும் 3 லட்சம் இந்தியர்கள் அடையாள ஆவணங்கள் இல்லாமல் தவிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைப்பது சரியானதல்ல என டாக்டர் சுப்ரா குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment