Monday, 26 June 2017

நோன்புப் பெருநாள் உபசரிப்பு சுல்தான் தலைமை; 20,000 பேர் பங்கேற்பு


ஈப்போ-
பேராக் மாநில அரசின் ஏற்பாட்டிலான நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பேராக் மாநில சுல்தான் நஸ்ரின் ஷா தலைமையில் நடைபெற்ற இந்த நோன்புப் பெருநாள் உபசரிப்பில் 20,000க்கு மேற்பட்ட பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விருந்துபசரிப்பின் சிலக் காட்சிகள்

சுல்தான் நஸ்ரின் ஷாவையும்  அவரின் துணைவியாரையும் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் வரவேற்றார்.

பல்வேறு உணவு வகைகள் பரிமாறப்பட்ட இந்த உபசரிப்பில் மூவினங்களைச் சேர்ந்த மக்களும் பங்கு கொண்டு 'மலேசியர்கள்' என்ற உணர்வை புலப்படுத்தினர்.

மேலும் பேராக் மாநில இளவரசர், ராஜா ஹீலிர், உட்பட சட்டமன்ற சபாநாயகர் தங்கேஸ்வரி, ஆட்சிக்குழு உறுப்பினர்கள், தேமு சட்டமன்ற உறுப்பினர்கள், மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் டத்தோ வ.இளங்கோ, டான்ஶ்ரீ எஸ்.வீரசிங்கம், எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் கேசவன் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment