Tuesday, 6 June 2017

சுங்கை சிப்புட் முதியோர் சமூகநல இயக்கத்தின் 10ஆம் ஆண்டு விழா


சுங்கை சிப்புட்-
முதியோர் நலன் காக்கப்படுவதற்கு ஏதுவாக தோற்றுவிக்கப்பட்ட சுங்கை சிப்புட் முதியோர் சமூக நல இயக்கத்தின் 10ஆம் ஆண்டு விழா அண்மையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பணி ஓய்வுக்குப் பின்னர் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் முதியோரை பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் வகையில் இந்த அமைப்பு கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது என அதன் தலைவர் ராதாகிருஷ்ணன் மணியம் தெரிவித்தார்.

வ்வமைப்பின் மூலம்  யோகா, சுற்றுலா, மருத்துவ முகாம், சமூகநல உதவிகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

முதியோர் என்றாலே அவர்களின் ஓய்வு நேரங்கள் தொலைகாட்சியிலேயே முழ்கி கிடப்பதை தவிர்க்கும் வகையில், இங்கு நாளிதழ் வாசிப்பது, யோகாசனம் மேற்கொள்வது, ஆரோக்கியம் குறித்த குறிப்புகளை தெரிந்து கொள்வதற்கு வழிவகுக்கபடுகிறது.

தற்காலிகமாக வாடகை வீட்டில் செயல்படும் இவ்வியக்கம் சொந்த கட்டடத்தை பெறுவதற்கு எண்ணம் கொண்டுள்ளது. அதற்கேற்ப சிறு தொகை வங்கி கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள நிலையில் நல்லுள்ளங்கள் பெருமளவு உதவி புரிய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.



இந்த நிகழ்வில் டான்ஶ்ரீ எஸ்.வீரசிங்கம், அமுசு பெ.விவேகானந்தா, தொகுதி மஇகா தலைவர் இளங்கோ முத்து, செயலாளர் கி.மணிமாறன், குருக்கள் ரத்னம், அமுசு ஏகாம்பரம் உட்பட பல்வேறு வர்த்தகர்களும் அரசியல் பிரமுகர்களும் பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment