கோலாலம்பூர்-
புதிதாக
அறிமுகப்படுத்தப்படவுள்ள சுற்றுலா வரி வரும் ஜூலை 1ஆம் தேதி பதிவு பெற்ற அனைத்து
தங்கும் விடுதிகளிலும் விதிக்கப்படும் என சுற்றுலா துறை அமைச்சர் டத்தோஶ்ரீ நஸ்ரி அஸிஸ்
தெரிவித்தார்.
இந்த சுற்றுலா
வரி பதிவு பெற்ற ஹோட்டல்கள், இன்ஸ்களில் விதிக்கப்படும் வேளையில் வெ.2.50
முதல் வெ.20 வரை வசூலிக்கப்படவுள்ளது.
இதன் மூலம்
நாட்டில் பதிவு பெற்றுள்ள 11 மில்லியன் விடுதி அறைகளில் 60 விழுக்காட்டு பயன்பாடு இருந்தாலும் வெ.654.62 மில்லியன் வரை நாட்டிற்கு வருமானம் கிடைக்கும் என நஸ்ரி மேலும் கூறினார்.
கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் அமைச்சர் நஸ்ரி
சுற்றுலா துறை மசோதா ஒன்றினை தாக்கல் செய்தார். அம்மசோதா பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, செய்தி நிறுவனம் ஒன்று சுற்றுலா
வரி ஒத்தி வைக்கப்படும் என செய்தி வெளியிட்டிருந்ததை அடுத்து, அதனை மறுத்த அமைச்சர் நஸ்ரி திட்டமிட்டப்படி ஜூலை 1ம் தேதி முதல் சுற்றுலா வரி கட்டாயம் அமல்படுத்தப்படும் பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற
உறுப்பினருமான அவர் கூறினார்.
No comments:
Post a Comment