Monday 15 May 2017

ஆஸ்ட்ரோவின் இலவச வீடியோ ஸ்ட்ரீமிங் சேவை “NJOI Now” அறிமுகம்

ஆஸ்ட்ரோவின் இலவச வீடியோ ஸ்ட்ரீமிங் சேவை “NJOI Now” அறிமுகம்

கோலாலம்பூர்-
ஆஸ்ட்ரோ மலேசியா ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (Astro) புதிய இலவச வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையான “NJOI Now” எனும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. கையடக்க கருவி, ஆன்லைன் வாயிலாகக் கிடைக்கக்கூடிய இச்சேவை, மலேசியர்கள் ஆன் டிமாண்ட் பொழுதுபோக்கு உள்ளடக்கங்களோடு பிரத்யேகமான அத்தியாயங்கள் கொண்ட நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகளின் நேரலை, அண்மைய செய்திகள் ஆகியவற்றை இலவசமாக அணுகலாம்.

இன்றைய டிஜிட்டல் வாழ்க்கை முறையை நுகர்வோரின் தேவைகளை எந்தவொரு தடையுமின்றி முழுமையான நெகிழ்வு தன்மையுடன் பூர்த்தி செய்வதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் “NJOI Now” மட்டுமே கையடக்க செயலி ஆன் டிமாண்ட் உள்ளடக்கங்கள், பிரத்யேகமான அத்தியாயங்கள்,  ஆஸ்ட்ரோ பிரிமா, ஆஸ்ட்ரோ மாயா எச்.டி, ஆஸ்ட்ரோ ஒயாசிஸ், ஆஸ்ட்ரோ AEC, ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசைகளின் முக்கிய நிகழ்ச்சிகள், ஆஸ்ட்ரோ அரேனாவின் விளையாட்டு நிகழ்ச்சிகளின் நேரலை, ஆஸ்ட்ரோ அவானியின் அண்மைய செய்திகள், ஆஸ்ட்ரோ Tutor TV அலைவரிசையில் கல்வி கற்றல் நிகழ்ச்சிகள் என இலவசமாக வழங்குகின்றது. இந்தச் சேவையைப் பதிவிறக்கம் செய்து கையடக்க கருவி மற்றும் ஆன்லைன் வாயிலாகச் சிறந்த உள்ளூர் மற்றும் அனைத்துலக உள்ளடங்களைக் கண்டு களிக்கலாம்.

மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ முகமட் நஜிப் துன் ரசாக் “NJOI Now” எனும் செயலியை அதிகாரப்பூர்வமாக  அறிமுகப்படுத்தினார். அவரது உரையை தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சாலே சைட் கெருவாக் வாசித்தார்.

அவரது உரையின்போது, “NJOI Now” போன்று பல்வேறு தளங்களில் மேலும் டிஜிட்டல் உள்ளடக்கங்கள் உருவாக்கப்படும் என நம்புகிறேன். இதன் மூலம், மக்களை எளிதாக அணுகி தற்போது அரசாங்கம் ஊக்குவித்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 




டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துகின்ற மிகப் பெரிய குழு இளைஞர்கள் என்றால் அது ஆச்சரியத்திற்குரிய ஒன்றல்ல. ஆகவே, தொழில் முனைவோர் ஆகுவதற்கு இளைஞர்கள் இந்த டிஜிட்டல் பொருளாதாரத்தின் வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, அண்மையில் அரசாங்கம் அறிமுகப்படுத்திய Digital Free Trade Zone எனும் திட்டம் ஊக்குவிக்கின்றது என்றார்.

ஆஸ்ட்ரோவின் தலைமை நிர்வாக அதிகாரி, டத்தோ ரோஹானா ரோஷன், கூறுகையில்,கடந்த 2011ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த NJOI சேவை தற்போது 1.8 மில்லியன் வீடுகளில் ஊருவியுள்ளது. இந்த எண்ணிக்கை எதிர்வரும் காலங்களில் 12 மில்லியன் பார்வையார்களைச் சென்றடையும் வாய்ப்புள்ளது.
இவை எங்களின் கடமைகளைக் கருத்தில் கொண்டு அதாவது டிஜிட்டல் வாழ்க்கை முறையைப் பூர்த்தி செய்வது, வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து இணைந்து ஆன் டிமாண்ட் சேவை ஆகியவற்றை வழங்குகின்றோம்.

இன்று அறிமுகம் கண்டுள்ள “NJOI Now” வாயிலாக மலேசியர்கள் அனைத்து திரைகளிலும், தங்கள் வீடு மற்றும் கையடக்க கருவிகளில் உள்ளடக்கங்களை இலவசமாகக் கண்டு களிக்கலாம். இந்த இலவச சேவை 2,220-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், நாடகங்கள், விளையாட்டு மற்றும் செய்திகளின் நேரலை, ஆஸ்ட்ரோவின் இணைய வியாபாரம் எனப்படும் கோ ஷோப் என தங்களுடைய விருப்ப அலைவரிசைகளையும் இரசிகர்கள் கண்டு மகிழலாம்.




எங்களின் NJOI Now வாடிக்கையாளர்களுக்குத் தேர்வு உள்ளடக்கம் மற்றும் இணைப்பு ஆகியவற்றை வழங்குவதன் மூலம் சிறந்த சேவையைத் தருவோம் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment