Friday 12 May 2017

அரசியல் கட்சியாக உருவெடுக்கிறது 'ஹிண்ட்ராஃப்'

ரசியல் கட்சியாக உருவெடுக்கிறது 'ஹிண்ட்ராஃப்'


கோலாலம்பூர்-
மலேசிய இந்தியர்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வந்த 'ஹிண்ட்ராஃப்' அமைப்பு கூடிய விரைவில் ஓர் அரசியல் கட்சியாக உருமாற்றம் காணவுள்ளது. இந்த கட்சிக்கு முன்னாள் துணை அமைச்சரும் வழக்கறிஞமான பொ.வேதமூர்த்தி தலைவர் தாங்கவுள்ளார் என நம்பப்படுகிறது.

2007ஆம் ஆண்டு தலைநகரில் நடைபெற்ற இந்தியர்களின் எழுச்சிப் பேரணிக்கு  வித்திட்டது ஹிண்ட்ராஃப் அமைப்பு. அந்த பேரணி ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக நாடாளுமன்றத்தில் 3இல் 2 பெரும்பான்மையை தேசிய முன்னணி இழந்தது.

இந்தியர்களின் உரிமை காக்க தொடங்கப்பட்ட ஹிண்ட்ராஃப்  அமைப்பு ஓர் அரசியல் கட்சியாக  உருவெடுப்பதற்கு கடந்த 7ஆம் தேதி நடைபெற்ற அதன் பேராளர் கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

இந்த இயக்கம், உண்மையிலேயே நலிந்த இந்திய மக்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி, ஊது குழல் கட்சிகளைப் போல இல்லாமல், ஓர் அரசியல் கட்சியைப் போலவே, கடந்த 2005 முதல் செயல்படுகின்ற நிலையில், ஹிண்ட்ராப் சட்ட ஆலோசகர் கார்த்திகேசன் சண்முகம் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு அமைத்து, 1960 இயக்கங்கள் சட்ட ஷரத்துகள் குறித்து, குறிப்பாக சட்டப் பிரிவு 11(3) (பி) பற்றி விரிவாக ஆலோசித்து, ஹிண்ட்ராப் இயக்க சட்ட திட்டங்கள்அரசியல் கட்சிக்குரிய தன்மையுடன் இருப்பதால், ஹிண்ட்ராஃப் இயக்கம் அரசியல் கட்சியாக மாறுவதில் நடைமுறைச் சிக்கல் என்று அறிவித்தனர்.

அண்மையில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வரங்கு,  பொதுமக்களுடனான சந்திப்புகளைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டது என்றுஹிண்ட்ராப்அமைப்பின் செயலாளர் முனியாண்டி பொன்னுசாமி வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.

ஹிண்ட்ராப்ஓர் அரசியல் கட்சியாக உருமாறுவதற்கு நாட்டு மக்களிடமிருந்து மோக ஆதரவு கிடைத்துள்ள வேளையில், நாட்டு மக்களின்  பிரச்சினைகளைக் கேட்டறியஹிண்ட்ராப்போன்ற ஓர் அரசியல் கட்சி தேவை எனவும் அவர்கள் குரல் கொடுத்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

தற்போது அரசாங்கத்தில் சில இந்தியர்கள் பதவி வகித்தாலும் அவர்கள் நாடாளுமன்றம், அரசாங்கப் பதவிகளை நிரப்பும் வகையில் மட்டுமே தங்களின் பங்கை ஆற்றி வருவதாகவும் மக்கள் கருத்து கூறியுள்ளனர் என்றார்.

ஹிண்ட்ராப்அமைப்பை ஓர் அரசியல் கட்சியாக உருமாற்றுவதற்கு உள்துறை அமைச்சர் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டதாக அம்மாநாட்டில் ஏகமானதாக கேட்டுக் கொள்ளப்பட்டது.

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணியை 'ஹிண்ட்ராஃப்' ஆதரிக்கும் எனவும் முடிவெடுக்கப்பட்டது என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment