Friday 5 May 2017

‘என் கனவும்’ பாடல், டனுட்ரா பிலிம் புரொடக்‌ஷன் அறிமுக விழா

என் கனவும் பாடல்

டனுட்ரா பிலிம் புரொடக்‌ஷன் அறிமுக விழா



கோலாலம்பூர்-
மலேசியக் கலைத்துறையில் சாதிக்க வேண்டும் என துடிக்கும் கலைஞர்களின் தேர்வாக அமைவது குறும்படமும் தனி பாடல்களுமே ஆகும்.

அவ்வகையில் தங்களது திறமையின் மேல் நம்பிக்கை வைத்து கலைத்துறையில் கால் பதித்துள்ள டனுட்ரா குழுவினர் குறும்படத்தை தயாரிக்கும் முயறிச்யில் இறங்கியுள்ளனர்.

இது குறித்து விவரித்த இக்குழுவின் கலைஞர் ரமேஷ் கூறுகையில், என்னோது இருக்கும் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்திறன் உள்ளது. ஒளிப்பதிவு, இயக்கம், பாடுவது, பாடல் வரிகளை எழுதுவது என ஒவ்வொருவரும் தனித்திறமைகளை கொண்டுள்ளோம்.

இதனை அடிப்படையாகக் கொண்டு ஏன் ஒரு குழுவை அமைத்து குறும்பத்டம் தயாரிக்ககூடாது எனும் எண்ணம் எழுந்தது. அதன் விளவுதான் டனுட்ரா பில்ம் புரொடக்‌ஷன் உதயமானது.

இந்நிறுவனத்தின் மூலம் மெல்லினா குறும்படத்தை தயாரிக்க முடிவு செய்து 55 விழுக்காடு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்ட ஒரு தகவலை பார்க்காவிட்டால் ஏற்படும் விளைவுகளை மையப்படுத்தி இக்குறும்படம் தயாரிக்கப்படுகிறது.


இந்த குறும்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் "என் கனவு". இந்த பாடல், டனுட்ரா பிலிம் புராடாக்‌ஷன்ஸ் அறிமுகம் ஆகிய இரண்டும் நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் நடைபெறவிருப்பதாக ரமேஷ் குறிப்பிட்டார்.

இந்த பாடலை "நோ என்றி" (டனுட்ரா குழு) அருள் பாடியுள்ளார். இப்படத்தின் பாடல் வரிகளை டனுட்ரா குழுவினர் எழுதியுள்ளனர். இசை ஒய்டி எம்பாயர் ஸ்லிம் லெசர். இந்த மெலினா குறும்படத் தயாரிப்பு குழவில் மேஷ், டிஜே ஷோட், பாரிஸ், அருள்ஸ், ஹேமா, கிஸ்காண்ட், ஜோ, பிரியோ, ஜெனி, ஆஷா குட்டி, ஸ்ரீ, மதன் ஃபிஷ், லுயிஸ், 
ஜூன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குறும்படத்தில் இடம்பெற்றுள்ள என் கனவும் பாடல், டனுட்ரா பிலிம் புரொடக்‌ஷன் ஆகியவற்றின் அறிமுக விழா நாளை 5ஆம் தேதி இரவு 9.00 மணிக்கு டூத்தாமாஸ் பப்ளிக்காவில் உள்ள ரிதம் ஆப் சென்னை எனுமிடத்தில் நடைபெறவுள்ளது. 

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் தங்களோடு தொடர்பு கொள்ளலாம் என ரமேஷ் குறிப்பிட்டார். தொடர்புக்கு: 017-2886 411. 

No comments:

Post a Comment