Thursday 4 May 2017

'விஷத் திரவத்தை உட்கொள்ள வற்புறுத்தல்' மாணவர் பிரவீன் மரணம்!

'விஷத் திரவத்தை உட்கொள்ள வற்புறுத்தல்'
மாணவர் பிரவீன் மரணம்!





நீலாய்-
விஷத் தன்மைமிக்க திரவத்தை வலுகட்டாயமாக உட்கொள்ள வைக்கப்பட்ட மூன்றாம் படிவ மாணவர் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று 2ஆம் தேதி இரவு மரணமடைந்தார்.

இங்குள்ள இடைநிலைப்பள்ளி ஒன்றில் மூன்றாம் படிவம் பயிலும் எஸ்.பிரவினை கடந்த புதன்கிழமை மாணவர் கும்பல் ஒன்று விஷத் திரவத்தை உட்கொள்ள வற்புறுத்தியுள்ளது.

இச்சம்பவத்தை தனது தாயாரிடம் தெரிவித்த பிரவீன் தொண்டை, வயிற்று வலிக்கு ஆளானதைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்காக கிளினிக்கை அணுகியுள்ளார்.

பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிரவீனுக்கு தொடர் சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும் அதி பலனளிக்காமல் நேற்றிரவு மரணமடைந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் போலீசார் புலன் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடம் தங்களது விதிமுறைகளை இன்னும் கடுமையாக்க வேண்டும் எனவும் பிரவீனின் தந்தை எம்.செல்வராஜா வலியுறுத்தினார்.

மாணவர் கும்பல் ஒன்றினால் கட்டாயப்படுத்தப்பட்டு விஷ திரவத்தை உட்கொண்ட 15 வயது மதிக்கத்தக்க மாணவர்.

No comments:

Post a Comment