Friday 12 May 2017

மக்கள் சேவையிலிருந்து மஇகா பின்வாங்காது!

மக்கள் சேவையிலிருந்து மஇகா பின்வாங்காது!



சுங்கை சிப்புட்-
மக்களின் சேவையிலிருந்து மஇகா என்றுமே பின்வாங்காது. மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அவர்களுக்கு உதவுவதில் முன் நிற்போம் என சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் கூறினார்.

இந்திய சமுதாயம் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மஇகா தகுந்த தீர்வினை கண்டு வருகிறது. சமூகநலன், அடையாள அட்டை, குடியுரிமை உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு மஇகா தொடர்ந்து ஆக்ககரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

யார் எது தேவையென்றாலும் அதற்கு உரிய தீர்வு காண்பதில் மஇகா ஒருபோதும் பின் வாங்காது என மணிமாறன் குறிப்பிட்டார்.

அண்மையில் சுங்கை சிப்புட் தேசிய முன்னணி தலைவரும் லிந்தாங் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ சூல்கிப்ளி ஹருணுடன் இங்கு பல்வேறு அடிப்படை பிரச்சினைகளை எதிர்நோக்கும் இந்தியக் குடும்பங்களை நேரில் சந்தித்து அவர்கள் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

No comments:

Post a Comment