Wednesday 10 May 2017

பாம்புகள் படையெடுக்கும் புந்தோங் பகுதி?

பாம்புகள் படையெடுக்கும் புந்தோங் பகுதி?


ஈப்போ-
பாம்புகளின் கூடாரமாக மாறிவரும் புந்தோங் கம்போங் பஹாரு  குடியிருப்புப் பகுதியை தூய்மைப்படுத்துவதில் ஈப்போ மாநகர் மன்றம் அலட்சியப்படுத்தக்கூடாது என புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் வலியுறுத்தினார்.

இந்த பகுதியைச் சுற்றிலும் காடு மண்டிக் கிடப்பதால் இங்கு பாம்புகளின் படையெடுப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அச்சத்துடனே வாழும் இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த குடியிருப்புப் பகுதி பாதுகாப்பற்ற சூழலில் உள்ளதை சட்டமன்றத்தில் குரல்யெழுப்பியுள்ளதோடு  ஈப்போ மாநகர் மன்றத்திலும்  பலமுறை முறையிடப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு உரிய தீர்வு காணப்படாமல் இருப்பதால் பாம்புகளின் படையெடுப்பில் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர் என ஈப்போ மாநகர் மன்றத்தில் மகஜர் சமர்ப்பிக்கப்பட்ட போது செய்தியாளர்களிடம் பேசுகையில் சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.

தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினையை  ஈப்போ மாநகர் மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கையில் பாம்புடன் அக்குடியிருப்பு மக்கள் வந்திருந்தனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு கய் கியு சாய் வீட்டினுள் நுழைந்த 6 ஆடி நீளமுள்ள நாகம் அவரது வளர்ப்பு நாயை தீண்டியதால் அது மரணமடைந்தது.

No comments:

Post a Comment