Tuesday 2 May 2017

'உலக நேசன்' மாத இதழ் அறிமுகமானது!

'லக நேசன்' மாத இதழ் அறிமுகமானது!






ஈப்போ
35 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றி வரும் .எஸ். மணியின் 'உலக நேசன்' மாத இதழை பேராக் இந்திய வர்த்தக சபை இங்கு அறிமுகம் செய்தது.

தமிழ்நாடு, சென்னையை தலைமையகமாகக்கொண்டு செயல்படும் 'உலக நேசன்' மாத இதழை உலகம் முழுவதும் வெளியீடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பேராக் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

நான்காம் ஆண்டாக அறிமுக விழா காணும் இம்மாத இதழை கல்வி துணை அமைச்சர் டத்தோ .கமலநாதன் அறிமுகம் செய்து வைத்தார்.

தமிழ்நாட்டை மட்டும் தவிர்த்து உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்களை ஒன்றிணைக்கும் வகையில் வெளியீடு கண்டு வரும் 'உலக நேசன்' மாத இதழுக்கு மலேசிய இந்தியர்கள் முழுமையான ஆதரவு தர வேண்டும் ஆண்டு சந்தா செலுத்தி உறுப்பினராக பதிந்து கொண்டால் அவர்களின் இல்லங்களுக்கே இம்மாத இதழ் அனுப்பி வைக்கப்படும் என .எஸ்.மணி கூறினார்.


பேராக் இந்திய வர்த்தக சபையின் தலைவர் எம்.கேசவன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  பேராசிரியர் பாலசுப்பிரமணியம், சமூக சேவகர் .கமலநாதன். சுங்கை சிப்புட் தமிழ் மணிமன்றத் தலைவர் கி.மணிமாறன் உட்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment