Monday 22 May 2017

'அன்வார் 7ஆவது பிரதமர்' பதாகை ஏந்திய தலைவர்கள்

'அன்வார் 7ஆவது பிரதமர்'பதாகை ஏந்திய தலைவர்கள்


ஷா ஆலம்-
'அன்வார் 7ஆவது பிரதமர்' என்ற பதாகையை ஏந்தி நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் யார்? என்ற கேள்விக்கு விடையளித்துள்ளனர் எதிர்க்கட்சித் தலைவர்கள்.

ஷா ஆலமில் நடைபெற்ற பிகேஆர் கட்சியின் தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் அக்கட்சியின் டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, உதவித் தலைவர்கள் ஆகியோர் 'அன்வார் 7ஆவது பிரதமர்' வாசகம் பதித்த பதாகையை ஏந்தியிருந்தனர்.

அவர்களோடு ஜசெகவின்  தலைவர் லிம் கிட் சியாங், பார்ட்டி அமானா நெகாரா தலைவர் முகமட் சாபு ஆகியோரும் இந்த பதாகையை ஏந்தியிருந்தனர்.

ஆனால் இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரிபூமி பெர்சத்து மலேசியா  கட்சியின் (பெர்சத்து) அவைத் தலைவர் துன் டாக்டர் மகாதீர், தலைவர் முஹிடின் யாசின் ஆகியோர் இந்த பதாகையை ஏந்தவில்லை.

மாறாக மகாதீர் கூட்டத்தை படம் பிடித்துக் கொண்டிருந்தார். முஹிடின் புன்னகையுடன் கைத்தட்டி பாராட்டினார்.

No comments:

Post a Comment