Thursday, 27 April 2017

மீண்டும் மலர்ந்துவிட்டது ‘மாணவர் முழக்கம் 2017’

மீண்டும் மலர்ந்துவிட்டது 

மாணவர் முழக்கம் 2017



கோலாலம்பூர்-
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பேச்சாற்றலை வெளிக்கொணரும்  மாணவர் முழக்கம் 2017  மீண்டும் மலர்ந்து விட்டது. கடந்தாண்டு அனைத்துல அளவில் நடத்தப்பட்ட இந்த போட்டி மீண்டும் புத்துயிர் பெறுகிறது.

ஆஸ்ட்ரோ வானவில்லும் வணக்கம் மலேசியாவும் இணைந்து படைக்கும் இந்த  மாணவர் முழக்கத்தின் இவ்வாண்டுக்கான முதல் மண்டலப் போட்டி அண்மையில் தலைநகரில் நடத்தப்பட்டது.

முன்னதாக இந்த போட்டியில் பங்கெடுக்க நாடு முழுவதிலுமிருந்து 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் காணொளி வாயிலாக தங்களது பேச்சாற்றல் பதிவை தேர்வு சுற்றுக்கு அணுப்பி வைத்திருந்தனர். அதில் 120 மாணவர்களை மட்டுமே நடுவர் குழு தேர்வு செய்தது.

இந்த முதல் மண்டல சுற்றில் சிலாங்கூர், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான், பகாங் மாநிலத்தைச் சேர்ந்த 30 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான அரையிறுதி  போட்டி  நடைபெற்றது.
சிறப்பான படைப்பை வெளிபடுத்திய இந்த 30 மாணவர்களில் 6 மாணவர்கள் மட்டுமே  மாணவர் முழக்கத்தின் இறுதிச் சுற்றுகு தேர்வாகினர்.

சஞ்சிதா பெரியசாமி (வெஸ்ட்கன்ரி தமிழ்ப்பள்ளி,சிலாங்கூர்), நவீன் செல்வசுப்ரமணியம், விலோஷனா மனோகரன் (காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி, சிலாங்கூர்), முகிலன் கந்தசாமி (மெத்தடிஸ்ட், காப்பார் தமிழ்ப்பள்ளி, சிலாங்கூர்), சச்சிந்திரன் வீரங்கன், யாசிகா கலைமணி (பண்டார் இந்திரா மக்கோத்தா தமிழ்ப்பள்ளி, பகாங்) ஆகியோரே இறுதிச் சுற்றுக்கு தேர்வான மாணவர்கள் ஆவர்.

இன்னும் முன்று சுற்றுகள் எஞ்சியிருக்கும் வேளையில் மாபெரும் இறுதிச் சுற்றில் வாகை சூடும் மாணவர்கள் மலேசியாவை பிரதிநிதித்து இம்முறை இந்தியாவில் நடைபெறவிருக்கும் அனைத்துலகை மாணவர்க முழுக்க போட்டியில் பங்கேற்பர் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment