Saturday 20 May 2017

வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மகளிருக்கு வெ. 12.1 மில்லியன் நிதியுதவி

வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மகளிருக்கு வெ. 12.1 மில்லியன் நிதியுதவி



சுங்கை சிப்புட்-
'சீட்' செயலகத்தின் மூலம் 30,366  இந்திய வர்த்தகர்களுக்கு இதுவரை 13 கோடி வெள்ளி வர்த்தக கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ  ஸம்ரி அப்துல் காதீர் தெரிவித்தார்.

பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ள இந்திய சமுதாயம் முன்னேற்றம் காணும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட வர்த்தக கடனுதவி வழி பலர் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளனர்.

தெக்குன் நேஷனல் மூலம் நாடு தழுவிய நிலையில் 19, 342 வர்த்தகர்களுக்கு 2257.20 மில்லியன் வெள்ளி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அதில் பேராக் மாநிலத்தைச் சேர்ந்த 3,005 பேருக்கு 36 மில்லியன் வெள்ளி வழங்கப்பட்டுளளது.

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த 411 இந்திய வர்த்தகர்களுக்கு 6.6 மில்லியன் வெள்ளி  வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று அமானா இக்தியார் மலேசியா கடனுதவி மூலம் நாடு தழுவிய அளவில் 9,455 மகளிருக்கு 123 மில்லியன் வெள்ளி வழங்கப்பட்டுள்ளது.

அதில் பேராக் மாநிலத்தைச் சேர்ந்த 3,237 மகளிருக்கு 56.8 மில்லியன் வெள்ளி வழங்கப்பட்டுள்ளது. இதில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த 2,069 மகளிருக்கு 12.1 மில்லியன் வெள்ளி வழங்கப்பட்டுள்ளது என நேற்று இங்கு நடைபெற்ற மக்கள் நல மேம்பாட்டு சந்திப்பு நிகழ்வில் உரையாற்றுகையில் டத்தோஸ்ரீ ஸம்ரி இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்வில் சிறப்பாக ஈடுபட்டு வரும் மகளிருக்கு சிறப்பு நிதியுதவிக்கான காசோலையை டத்தோஸ்ரீ ஸம்ரி எடுத்து வழங்கினார்.

No comments:

Post a Comment